சூர்யாவின் அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் சூர்யா நடித்து வரும் சூரரைப்போற்று படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் அந்த நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ’வெய்யோன் சில்லி’ என்ற பாடல் வரும் 13ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற ‘மாறா தீம்’ என்ற சூர்யா பாடிய பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மிக விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா
 
சூர்யாவின் அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் சூர்யா நடித்து வரும் சூரரைப்போற்று படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் அந்த நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ’வெய்யோன் சில்லி’ என்ற பாடல் வரும் 13ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற ‘மாறா தீம்’ என்ற சூர்யா பாடிய பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மிக விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை விமான நிலையத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது

From around the web