சூர்யா கொடுத்த ரூ.30 லட்சம் யாருக்கு? தயாரிப்பாளர் சங்கங்கள் இடையே பரபரப்பு

சூரரைப் போற்று திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய இருக்கும் நடிகர் சூர்யா அந்த படத்தில் கிடைத்த லாபத்தில் இருந்து 5 கோடியை திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் கொடுப்பதாக அறிவித்திருந்தார்இதனையடுத்து நேற்று ரூபாய் 1.5 கோடியை திரையுலகினருக்கு பிரித்துக் கொடுத்தார். அதில் ரூபாய் 30 லட்சம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கம் இரண்டாக உள்ளது. பழைய தயாரிப்பாளர் சங்கமும் பாரதிராஜாவின் நடப்பு தயாரிப்பாளர் சங்கமும் என இரண்டு சங்கங்கள் உள்ளதால் சூர்யா கொடுத்த
 

சூர்யா கொடுத்த ரூ.30 லட்சம் யாருக்கு? தயாரிப்பாளர் சங்கங்கள் இடையே பரபரப்பு

சூரரைப் போற்று திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய இருக்கும் நடிகர் சூர்யா அந்த படத்தில் கிடைத்த லாபத்தில் இருந்து 5 கோடியை திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் கொடுப்பதாக அறிவித்திருந்தார்
இதனையடுத்து நேற்று ரூபாய் 1.5 கோடியை திரையுலகினருக்கு பிரித்துக் கொடுத்தார். அதில் ரூபாய் 30 லட்சம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கம் இரண்டாக உள்ளது. பழைய தயாரிப்பாளர் சங்கமும் பாரதிராஜாவின் நடப்பு தயாரிப்பாளர் சங்கமும் என இரண்டு சங்கங்கள் உள்ளதால் சூர்யா கொடுத்த 30 லட்சம் யாருக்கு என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது

பாரதிராஜாவின் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது திரைப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் வசதியான தயாரிப்பாளர்கள் இருப்பதால் இந்த பணத்தை திரைப்படங்கள் எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பழைய தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளவர்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் என கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன

இருப்பினும் இது குறித்து எந்த முடிவும் இன்னும் எடுக்கவில்லை என்பதால் தயாரிப்பாளர் சங்கங்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web