அவசரப்பட்டு அறிக்கை வெளியிட்ட ஹரி: சூர்யா குடும்பத்தினர் வருத்தம்

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் கடுமையாக விமர்சனம் செய்தாலும் திரையுலகைச் சேர்ந்த யாருமே அவரது முடிவை எதிர்க்கவில்லை இந்த நிலையில் திடீரென இயக்குனர் ஹரி தான் வெளியிட்ட ஒரு அறிக்கையில் சூர்யாவின் ஓடிடி முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டார் இந்த அறிக்கையால் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் வருத்தம் அடைந்ததாக தெரிகிறது உண்மையில் அருவா திரைப்படத்தின்
 

அவசரப்பட்டு அறிக்கை வெளியிட்ட ஹரி: சூர்யா குடும்பத்தினர் வருத்தம்

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் கடுமையாக விமர்சனம் செய்தாலும் திரையுலகைச் சேர்ந்த யாருமே அவரது முடிவை எதிர்க்கவில்லை

இந்த நிலையில் திடீரென இயக்குனர் ஹரி தான் வெளியிட்ட ஒரு அறிக்கையில் சூர்யாவின் ஓடிடி முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டார் இந்த அறிக்கையால் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் வருத்தம் அடைந்ததாக தெரிகிறது

உண்மையில் அருவா திரைப்படத்தின் கதை சூர்யாவுக்கு பிடிக்கவில்லை என்றும் இருப்பினும் அவருக்கு கண்டிப்பாக ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான ஒரு படத்தை ரீமேக் செய்யுங்கள் என்று ஹரியிடம் கேட்க சூர்யா திட்டமிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது

ஆனால் அதற்குள் இயக்குனர் ஹரி அவசரப்பட்டு அறிக்கை வெளியிட்டதால் இனி சூர்யா-ஹரி இணையும் படம் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. ஹரியின் அவசர முடிவு சூர்யா குடும்பத்தினர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது

From around the web