சிவகுமார் வீட்டில் இருந்து திரையுலகம் வந்த அடுத்த நபர்

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருந்து வரும் நிலையில் சிவகுமாரின் மகள் பிருந்தாவும் தற்போது சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இவர் நடிகையாக அறிமுகமாகாமல், பாடகியாக அறிமுகமாகியுள்ளார். தனஞ்செயன் தயாரிப்பில் முதல்முறையாக கவுதம் கார்த்திக், கார்த்திக் இணைந்து நடித்த ‘மிஸ்டர் சந்திரமௌலி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த படத்தில் சூர்யா, கார்த்தியின் தங்கை பிருந்தா ஒரு பாடலை பாடியுள்ளார். தங்கையின் சினிமா எண்ட்ரிக்கு
 

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருந்து வரும் நிலையில் சிவகுமாரின் மகள் பிருந்தாவும் தற்போது சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இவர் நடிகையாக அறிமுகமாகாமல், பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.

தனஞ்செயன் தயாரிப்பில் முதல்முறையாக கவுதம் கார்த்திக், கார்த்திக் இணைந்து நடித்த ‘மிஸ்டர் சந்திரமௌலி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த படத்தில் சூர்யா, கார்த்தியின் தங்கை பிருந்தா ஒரு பாடலை பாடியுள்ளார்.

தங்கையின் சினிமா எண்ட்ரிக்கு சூர்யா, கார்த்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் நடிகர் சிவகுமார், ஒரு வாழ்த்து மடலை மகளுக்கு அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து கார்த்தி, தனது டுவிட்டரில் கூறியதாவது ‘நான் எப்போதும் என் தங்கை பிருந்தாவுடன் விளையாடிக்கொண்டே இருப்பேன். ஆனால், எனக்கு இன்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என் தங்கை அதிகாரப்பூர்வமான பாடகியாக மாறியிருக்கிறார். இதற்கு காரணமான தயாரிப்பாளர் தனஞ்செயன், இசையமைப்பாளர் சாம், இயக்குனர் திரு ஆகியோருக்கு பெரிய நன்றிகள். மிஸ்டர் சந்திரமௌலி வெற்றி பெற வாழ்த்துகள்’ என்று பதிவு செய்திருக்கிறார்

From around the web