மாஸாக ஆரம்பமான சூர்யாவின் 40வது படம்!

பாண்டிராஜ் சூர்யா இணையும் சூர்யாவின் 40வது திரைப்படத்துக்கான படப்பிடிப்பு பூஜையுடன் கோவையில் இன்று தொடங்குகிறது.

 

சூரரைப்போற்று படத்திற்கு பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புதான் தற்போது பூஜையுடன் கோயம்புத்தூரில் தொடங்கியது. 

சூர்யா நடிப்பில் உருவாகும் 40வது திரைப்படமான இந்த திரைப்படத்தில் டாக்டர் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கிறார்.

மேலும் நடிகர் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் இப்படத்தில் இணைகின்றனர். இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன. இப்படத்தின் ஒளிப்பதிவு இயக்குநராக ரத்னவேலு இணைந்துள்ளார். இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.


 

From around the web