வழக்கறிஞர் உடையில் சூர்யா-வின் Viral ஷூட்டிங்

சூர்யா மற்றுமொரு படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துவரும் வரும் காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 
 
வழக்கறிஞர் உடையில் சூர்யா-வின் Viral ஷூட்டிங்

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் பெயரிடப்படாத திரைப்படம் சூர்யா40.

சூர்யாவின் இந்த 40வது திரைப்படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்துக்கு டி இமான் இசை அமைக்கிறார். அண்மையில் விஸ்வாசம் படத்தில் இசை அமைத்ததற்காக இமானுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இமானின் இசையில் உருவாகும் சூர்யா 40 திரைப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முன்னதாக பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் ஷூட்டிங் ஸ்டில்கள் அவ்வப்போது வெளியாகி வரவேற்பை பெற்று வந்தன.

இந்நிலையில், தற்போது சூர்யா மற்றுமொரு படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துவரும் வரும் காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்கள் #Suriya39 என்கிற ஹேஷ்டேகின் கீழ் வைரல் ஆகி வருகின்றன. இந்த படத்தின் இதர விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web