அஜித்தின் அடுத்த படம் குறித்த ஆச்சரிய தகவல்

 

தல அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

அதுமட்டுமின்றி இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் அதன் பின்னர் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன 

இந்த நிலையில் தற்போது ’வலிமை’ படத்தை முடித்த பின்னர் அடுத்த படத்தில் அஜித் நடிக்க இருப்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அஜித்தின் அடுத்த படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூரே தயாரிக்க உள்ளார்

அஜித், போனிகபூர், ஹிந்தி ரீமேக், ajith, boney kappor, hindi remake,

ஏற்கனவே நேர்கொண்டபார்வை, வலிமை ஆகிய இரண்டு அஜித் படங்களை தயாரித்த இவர் மீண்டும் அஜித் படத்தை தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஒரு சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஹிந்தி படத்தின் ரீமேக் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

மேலும் இந்த படத்தை இயக்குபவர் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது

From around the web