எவிக்சன் பாஸை பெற சுரேஷ் செய்த தந்திரம்: சுதாரித்த ரம்யா

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தொடரில் சுரேஷ் சக்கரவர்த்தி எவிக்ஷன் பாஸ் பெறுவதற்காக செய்த தந்திரம் போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் ஆச்சரியப்படுத்தியது

ஆரம்பம் முதலே அனைத்து போட்டியாளர்களையும் தந்திரமாக ஏமாற்றிய சுரேஷ் சக்கரவர்த்தி அனைத்து போட்டியாளர்களுக்கும் கடும் போட்டியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதமாக கருதப்படும் எவிக்ஷன் பாஸ் பெற சுரேஷ் சக்கரவர்த்தி நாமினேஷன் செய்யப்பட்ட ஏழு பேரையும் ஒவ்வொருவராக தந்திரமாக வெளியேற்றினார். அவர்களும் சுரேஷின் தந்திரத்தை புரிந்து கொள்ளாமல் அவரது வலையில் சிக்கி வெளியேறினர் 

ஆனால் கேப்ரில்லா கொஞ்சம் சுதாரித்து சுரேஷ் சக்கரவர்த்தியை எதிர்த்து கேள்வி எழுப்பிய போது அவரையும் ஒருவழியாக சமாளித்து வெளியே அனுப்பிவிட்டார். இந்த நிலையில்தான் ரம்யா பாண்டியன் கேப்ரியலா வெளியேற்றத்தின் பின்னர் சுதாரித்துக் கொண்டு எல்லோரையும் நீங்களே ஏன் நாமி செய்கிறீர்கள்? இந்த தடவை நான் ஏன் உங்களை நாமினேஷன் செய்யக் கூடாது என்று கூறியதும், அதற்கு அஜித்துக்கும் ஒப்புக்கொண்டதும் தான் சுரேஷ் சக்கரவர்த்தி வேறு வழியின்றி தனது தந்திரத்தை முடித்து கொண்டார். 

இருப்பினும் நேற்றைய நிகழ்ச்சியில் மிக அருமையாக தந்திரமாக சுரேஷ் சக்ரவர்த்தி விளையாடியது சக போட்டியாளர்கள் மத்தியில் ஆச்சரியம் அடைய செய்தது

From around the web