சுரேஷை திட்ட, திட்டமிட்ட சனம்: கமல்-வேல்முருகன் போட்டுடைத்த உண்மை

 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது

குறிப்பாக சுரேஷ் மற்றும் சனம்ஷெட்டி ஆகிய இருவர் குறித்த பிரச்சினையை கமலஹாசன் நீண்ட நேரம் விசாரித்தார். அப்போது சுரேஷ் தன்னுடைய செயல் தவறு தான் என்றும் அதற்காக தான் பலமுறை மன்னிப்பு கேட்டதாகவும் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் கூறினார் 

இந்த நிலையில் சனம் ஷெட்டியை கமல் விசாரித்தபோது தன்மேல் அடிபட்டதும் தனக்கு எல்லை மீறிய கோபம் வந்ததால் வயது வித்தியாசம் பாராமல் திட்டிவிட்டதாகவும், உணர்ச்சிப் பெருக்கில் அவ்வாறு செய்து விட்டதாக கூறினார்

ஆனால் கமலஹாசன், சனம் திட்டுவதற்கு முன் திட்டமிட்டதாகவும், அந்த திட்டத்தை வேல்முருகனிடம் கூறியதாகவும் கூறி குட்டை உடைத்தார். வேல்முருகனிடம் சனம், ‘என்னை அவர் அடித்தால் வயது வித்தியாசம் பார்க்க மாட்டேன் என்றும், அவரை போடா வாடா என்று பேசி விடுவேன் என்று நீங்கள் வேல்முருகன் இடம் கூறினீர்களே என்று கூறி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்

சுரேஷை திட்டுவதற்கு ஏற்கனவே சனம் திட்டமிட்டுள்ள உண்மையை கமல் போட்டுடைத்தார் என்பதும், இதை வேல்முருகன் ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web