பாட்ஷா பட இயக்குனரின் அடுத்த படத்தில் சிவா? பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான ’பாட்ஷா’ திரைப்படத்தை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. இவர் இந்த படம் தவிர ஆளவந்தான், சங்கமம், அண்ணாமலை, சத்யா உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா கடைசியாக ’இளைஞன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். அதன்பின்னர் கடந்த 9 வருடங்களாக திரைப்படங்களை இயக்காமல் இருந்த சுரேஷ் கிருஷ்ணா தற்போது ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் அந்த படத்தில் சிவா கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள்
 

பாட்ஷா பட இயக்குனரின் அடுத்த படத்தில் சிவா? பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான ’பாட்ஷா’ திரைப்படத்தை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. இவர் இந்த படம் தவிர ஆளவந்தான், சங்கமம், அண்ணாமலை, சத்யா உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா கடைசியாக ’இளைஞன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். அதன்பின்னர் கடந்த 9 வருடங்களாக திரைப்படங்களை இயக்காமல் இருந்த சுரேஷ் கிருஷ்ணா தற்போது ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் அந்த படத்தில் சிவா கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

முழுக்க முழுக்க காமெடி மற்றும் சென்டிமென்ட் கலந்த இந்த படத்தில் சிவா ஜோடியாக நடிக்க நடிகை அஞ்சலியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

ரஜினி, கமல் உட்பட பிரபல நடிகர்களின் படங்களை இயக்கிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் அடுத்த படத்தில் மிர்ச்சி சிவா நடிக்க உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சிவா, சுரேஷ் கிருஷ்ணா, பாட்ஷா, அஞ்சலி,

From around the web