பாடகர் வேல்முருகனின் தன்மானத்தை சீண்டிய சுரேஷ் சக்ரவர்த்தி: வைரலாகும் வீடியோ 

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்ரவர்த்தி முதலில் அனிதா சம்பத்திடம் வம்புக்கு இழுத்தார். செய்தியாளர்கள் வணக்கம் சொல்லும் போது எச்சில் தெறிக்கும் என்று அவர் கூறியது இரண்டு நாட்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

அதன் பின் நேற்று ரியோவிடம் பிரச்சினை செய்தார். போட்டியாளர்கள் அனைவரிடமும் தனித்தனியாக பிரச்சனை செய்து கொண்டிருக்கும் சுரேஷ் சக்ரவர்த்தி தற்போது பாடகர் வேல்முருகனை வம்புக்கு இழுத்துள்ளார் 

தனது வேஷ்டியை அவருக்கு கொடுத்ததை சொல்லி காட்டியதால் ஆவேசமான வேல்முருகன் அவரிடம் ஆவேசமான பேசும் புரமோ வீடியோ தற்போது வைரலாகி வருகின்றன. ஏழையாக இருந்தாலும் தன்மானத்துடன் வாழ்ந்துவரும் வேல்முருகனின் தன்மானத்தை சுரேஷ் சீண்டிவிட்டதாகவும் இனி அவருக்கு பிக்பாஸ் வீட்டில் கெட்ட நேரம்தான் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்

கிட்டத்தட்ட அனைவரும் சண்டை போட்டு விட்ட சுரேஷ் சக்ரவர்த்தி இன்னும் பிக்பாஸ் மற்றும் கமல்ஹாசனுடன் மட்டும் தான் சண்டை போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web