இந்த முறை ஆதரவு, அடுத்த முறை களத்தில்: விஜய்யின் மெகா திட்டம்!

 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவிருப்பதை அடுத்து அரசியல் கட்சிகள் தற்போது சுறுசுறுப்பாகி வருகின்றன. திமுக அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன என்பதும் இந்த முறை கூட்டணிகள் அதிரடியாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் களத்தில் குதித்து தேர்தலை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி விஜய்யும் அரசியல் குறித்த ஆலோசனைகளை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

இந்த நிலையில் விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து வெளிவந்துள்ள தகவலின்படி இந்த முறை அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திக்கும் திட்டம் எதுவும் விஜய்யிடம் இல்லை என்றும் ஆனால் திமுக அதிமுகவுக்கு மாற்றாக இருக்கும் மூன்றாவது அணிக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுக்கும் திட்டம் இருப்பதாகவும் கூறியுள்ளார்

திமுக அதிமுக அல்லாத மூன்றாவது அணி உருவாகுமா? அல்லது ரஜினி கமல் கட்சிகளுக்கு விஜய் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் 2026ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் கட்சி நிச்சயம் போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது

From around the web