நடிகர் தவசியின் உடல்நலம் விசாரித்த சூப்பர் ஸ்டார் ரஜினி!

 

’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்பட பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்தவர் நடிகர் தவசி. இவரது அற்புதமான நடிப்பு பல இயக்குனர்களையும் ரசிகர்களையும் கவர்ந்த நிலையில் தற்போது அவர் புற்றுநோய் காரணமாக உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 

இவரது சிகிச்சைக்கு உதவ வேண்டும் என அவரது குடும்பத்தினர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரூபாய் ஒரு லட்சமும், சிவகார்த்திகேயன் 25 ஆயிரம் ரூபாயும், சூரி 20 ஆயிரம் ரூபாயை அளித்தனர். மேலும் பலர் உதவி செய்ய தயாராக உள்ளனர் 

thavasi

இந்த நிலையில் நடிகர் தவசியின் உடல் நலம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் போன் மூலம் கேட்டறிந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், என்ன உதவி வேண்டுமானாலும் தன்னிடம் தாராளமாக கேட்கலாம் என்று தவசி குடும்பத்தினரிடம் கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

ஒரு துணை நடிகர் தான் என்று நினைக்காமல் தவசியின் உடல்நலம் குறித்து விசாரித்த ரஜினிகாந்த் பெருந்தன்மைக்கு நெட்டிசன்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

From around the web