2019 ஆம் ஆண்டு பொங்கலை ஒட்டி வெளியான சூப்பர் ஸ்டாரின் பேட்ட!!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட திரைப்படமாகும். இந்தப் படத்தின் பட்ஜெட் என்னவோ 160 கோடி தான், ஆனால் இதன் வசூலோ ரூ.232.92 கோடி ஆகும். கதையையும் தாண்டி ரஜினிக்காக பலரும் படம் பார்க்க சென்றனர், 20 வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய ஸ்டைல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த அந்த ரஜினியை கார்த்திக் சுப்புராஜ் கண்முன்னே கொண்டு வந்தார். கல்லூரியில் வார்டன் வேலைக்குச் செல்லும் அவர், முதல் நாளிலேயே பாபி
 
2019 ஆம் ஆண்டு பொங்கலை ஒட்டி வெளியான சூப்பர் ஸ்டாரின் பேட்ட!!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட திரைப்படமாகும்.

இந்தப் படத்தின் பட்ஜெட் என்னவோ 160 கோடி தான், ஆனால் இதன் வசூலோ ரூ.232.92 கோடி  ஆகும்.

கதையையும் தாண்டி ரஜினிக்காக பலரும் படம் பார்க்க சென்றனர், 20 வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய ஸ்டைல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த அந்த ரஜினியை கார்த்திக் சுப்புராஜ் கண்முன்னே கொண்டு வந்தார்.

கல்லூரியில் வார்டன் வேலைக்குச் செல்லும் அவர், முதல் நாளிலேயே பாபி சிம்ஹாவுக்கு எதிராக அதிரடியாக செயல்பட, ரசிகர்கள் மத்தியில் விசில்தான்.

2019 ஆம் ஆண்டு பொங்கலை ஒட்டி வெளியான சூப்பர் ஸ்டாரின் பேட்ட!!

அந்தக் கல்லூரியில் படிக்கும் அன்வர், மேகா ஆகாஷ் காதலுக்கு ஹெல்ப் பண்ண பாபி சிம்ஹா கடுப்பாகி அடிக்க ஆள் செட் பண்ண, வரும் அந்த ஆள்கள் பாபி சிம்ஹா அனுப்பியவர் கிடையாது என்று தெரிய வருகிறது.

ஃபிளாஸ்பேக்கில் நடந்த விஷயங்கள் காரணம் என்று தெரிய வருகிறது, கதை தமிழ் சினிமாவில் பார்த்த கதைதான், இதனை ரஜினி ஸ்டைலில் கார்த்திக் சுப்புராஜ் சொல்லி இருக்கார் அவ்ளோதான். சிம்ரன், த்ரிஷா கதாபாத்திரங்கள் வலுவாக இல்லை.

விஜய் சேதுபதி கதாபாத்திரம் ஓரளவு ஓகே, முதல் பாதி விறுவிறுன்னு இருந்தாலும் இரண்டாம் பாதி வளவளன்னு இழுத்து இருப்பதைக் குறைத்து இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறிவந்தனர்.

From around the web