சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ திரைவிமர்சனம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் இன்று வெளியாகி இருக்கும் தர்பார் திரைப்படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம் மும்பை நகரத்தை ஒரு போதை கும்பல் தலைவன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில் 17 போலீஸ்காரர்களை உயிரோடு எரித்து கொலை செய்கிறார். அவனை பிடிக்கவும் அவனது போதை கும்பல் வியாபாரத்தை கட்டுப்படுத்தவும் மும்பை போலீஸ் கமிஷனராக ஆதித்ய அருணாசலம் பதவியேற்கிறார். முதல் நாளிலேயே அதிரடியாக இறங்கும் போலீஸ் கமிஷனர் ஆதித்யா அருணாச்சலம் போதை கும்பல் சேர்ந்தவர்களை
 
Darbar
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ திரைவிமர்சனம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் இன்று வெளியாகி இருக்கும் தர்பார் திரைப்படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்

மும்பை நகரத்தை ஒரு போதை கும்பல் தலைவன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில் 17 போலீஸ்காரர்களை உயிரோடு எரித்து கொலை செய்கிறார். அவனை பிடிக்கவும் அவனது போதை கும்பல் வியாபாரத்தை கட்டுப்படுத்தவும் மும்பை போலீஸ் கமிஷனராக ஆதித்ய அருணாசலம் பதவியேற்கிறார். முதல் நாளிலேயே அதிரடியாக இறங்கும் போலீஸ் கமிஷனர் ஆதித்யா அருணாச்சலம் போதை கும்பல் சேர்ந்தவர்களை கைது செய்து ஒரு தொழிலதிபரின் மகன் தான் இதற்கு முக்கிய காரணம் என்பதையும் கண்டுபிடித்து அவனையும் கைது செய்கிறார். கைது செய்யப்பட்ட தனது மகனை விடுவிக்க அந்த தொழிலதிபர் எடுக்கும் நடவடிக்கையும், அதனை முறியடிக்கும் ரஜினியின் தந்திரமும் தான் இந்த படத்தின் கதை

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ திரைவிமர்சனம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு போலீஸ் கேரக்டரில் அட்டகாசமாக நடித்துள்ளார். வெறித்தனமாக குற்றவாளிகளை அடுத்தடுத்து என்கவுண்டர் செய்வது, போலீஸ் விதிகள் என்று எதையும் பின்பற்றாமல் அவர் இஷ்டத்திற்கு குற்றவாளியை அடித்துக்கொல்வது மனித உரிமை கமிஷன் தலைவரையே மிரட்டுவது என படம் முழுவதும் அதகளம் செய்து உள்ளார். அதேபோல் நயன்தாராவுடன் ரொமன்ஸ் யோகி பாபுவுடன் காமெடி என 20 வருடத்திற்கு முந்தைய ரஜினியை பார்க்க முடிகிறது. இந்த 70 வயதிலும் சுறுசுறுப்பாக நடனம், அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கும் ரஜினி, தனது ரசிகர்களை முழுவதுமாக திருப்திபடுத்தியுள்ளார்.

ஒரு ரஜினி படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும் ரஜினி ரசிகனை முழுவதுமாக திருப்தி செய்வது எப்படி என்பதையும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ திரைவிமர்சனம்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து இருந்தாலும் ஒரு சில காட்சிகள் மட்டுமே அவர் வருவதால் அந்த காட்சிகள் மனதில் ஒட்டவில்லை. ஆனால் அதே நேரத்தில் ரஜினியின் மகளாக வரும் நிவேதா தாமஸ் நடிப்பு சிறப்பானதாக உள்ளது. தந்தை மகள் உறவை மிகவும் நெகழ்ச்சியாக ஏ ஆர் முருகதாஸ் காண்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினியை கலாய்க்கும் யோகி பாபு காமெடி சிறப்பாக இருப்பதால் படத்தில் கலகலப்பு ஆங்காங்கே இருக்கிறது. முதல் பாதியில் ஒரு வில்லன், இரண்டாம் பாதியில் ஒரு வில்லன் என இரண்டு வில்லன்கள் இருந்தாலும் முதல் பாதி வில்லன் ரஜினிக்கு இணையாக ஈடுகொடுத்து நடிப்பில் மிளிர்கிறார். ஆனால் அதேசமயம் இரண்டாம் பாதியில் வில்லனாக ஏமாற்றம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அனிருத்தின் இசையில் மூன்று பாடல்கள் சூப்பராகவும் பின்னணி இசை அதிரடியாகவும் இருப்பது படத்திற்கு ஒரு பிளஸ் பாயிண்ட். அதேபோல் சந்தோஷ் சிவனின் கேமரா மிக அருமை ஏஆர் முருகதாஸ் தனது அற்புதமான திரைக்கதையில் முதல் பாதியை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார். ஒரு காட்சியில்கூட சோர்வில்லை. அதிரடி ஆக்ஷன் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள், காமெடி மற்றும் சரியான இடத்தில் பாடல்கள் என கச்சிதமாக முதல் பாதியை உருவாக்கியுள்ளார்

ஆனால் அதே நேரத்தில் இரண்டாம் பாதியில் படு சொதப்பலான திரைக்கதை எழுதி உள்ளதால் ரசிக்க முடியவில்லை . தந்தை-மகள் நிகழ்ச்சியான காட்சிகள் மற்றும் ரஜினியின் ஒரு சில காட்சிகள் மட்டுமே இரண்டாம் பாதியில் தேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மொத்தத்தில் முதல் பாதி ரஜினி ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் , இரண்டாம் பாதி ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமான படமாக உள்ளதுதான் இந்த ‘தர்பார்’

From around the web