அட இந்த நடிகையின் மகனா இவர்... சூப்பர் சிங்கரில் கலக்கும் ஆதித்யா...

கமலின் சூப்பர் ஹிட் பாடலான "உனக்கென மேலே நின்றாய்" பாடலை பாடி வெளியிட்ட  ஆல்பம் கடந்த வாரம் வெளியானது.
 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு அறிமுகமே தேவையில்லை. 2006-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வேற லெவல் வரவேற்பு பெற்றதையடுத்து அடுத்தடுத்த சீசன்களாக தற்போது 8-வது சீசன் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி பிரம்மாண்டமாக துவங்கியது. 

தமிழகத்திலிருந்து சிறந்த திறமையானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறது இந்த நிகழ்ச்சியில். அந்த வகையில் இதுவரை இல்லாத அளவில் ஒன்பது மணி நேர தொடர் ஒளிபரப்பாக இந்த நிகழ்ச்சியின் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்த எட்டாவது சீசன் போட்டியாளர்களை பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி முதல் எபிசோடிலேயே சிறப்பாக பாடி கவனத்தைப் பெற்றவர் ஆதித்யா கிருஷ்ணன். இவர் ஒரு பாடகர் மேலும் கிட்டார் இசை பயின்றவர். இவர் யாரென்றால் சின்னத்திரையில் அறிமுகமாகி பின்பு வெள்ளித்திரையில் டாப் ஹீரோக்களான விஜய், 

அஜித் போன்ற பலருடன் நடித்த நடிகை மீரா கிருஷ்ணனின் மகன்தான் ஆதித்யா கிருஷ்ணன். இவரது கமலின் சூப்பர் ஹிட் பாடலான "உனக்கென மேலே நின்றாய்" பாடலை பாடி வெளியிட்ட  ஆல்பம் கடந்த வாரம் வெளியானது. இதனை நடிகர் கமலின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆதித்யா கிருஷ்ணனின் குரலை பாராட்டி தனது டிவிட்டர் தளத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web