சூரி-வெற்றிமாறன் படம் குறித்த சூப்பர் தகவல்!

 

தனுஷ் நடித்த அசுரன் என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வெற்றிமாறன் அதன் பின்னர் சூரி நடிக்கும் படம் ஒன்றை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென கொரோனா வைரஸ் ஊரடங்கு காலம் வந்ததால் அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது 

மேலும் சூர்யா நடிக்க இருக்கும் வாடிவாசல் என்ற திரைப்படத்தையும் வெற்றிமாறன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த படம் ஆரம்பிக்கும் தகவல் குறித்து எதுவும் இன்னும் வெளிவரவில்லை 

soori

இந்த நிலையில் வெற்றிமாறனின் அடுத்த படம் சூரி படமா? அல்லது சூர்யா படமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது சூரி படம் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரம் தொடங்க இருப்பதாகவும் அனேகமாக இந்த படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் முடிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது 

ஆர்எஸ் இன்ஃபோட்ன்மெண்ட் நிறுவனம் இயக்கும் இந்த படத்தில் சூரியுடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்புடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை டிசம்பருக்குள் முடித்துவிட்டு அதன்பின்னர் சூர்யாவின் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என தெரிகிறது

From around the web