பாட்டி சொல்லை தட்டாதே திரைப்படமும் சூப்பர் காரும்

சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகையாகவும் நகைச்சுவை நடிகையாகவும் விளங்கியவர் மனோரமா. மனோரமாவின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரை கதையின் நாயகியாக்கி வெளிவந்த படம் பாட்டி சொல்லை தட்டாதே. இப்படம் பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. அப்போதைய புகழ்பெற்ற இயக்குனர் ராஜசேகர் இப்படத்தை இயக்கி இருந்தார். சாதாரண காமெடிப்படம்தான் இது. அதில் கொஞ்சம் குடும்ப உறவுகளையும் கொலாப்ஸ் செய்து படம் இயக்கி இருந்தார் ராஜசேகர். படத்தில் இடம்பெற்ற டில்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்லை தட்டாதே என்ற பாடல்
 

சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகையாகவும் நகைச்சுவை நடிகையாகவும் விளங்கியவர் மனோரமா. மனோரமாவின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரை கதையின் நாயகியாக்கி வெளிவந்த படம் பாட்டி சொல்லை தட்டாதே.

பாட்டி சொல்லை தட்டாதே திரைப்படமும் சூப்பர் காரும்

இப்படம் பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. அப்போதைய புகழ்பெற்ற இயக்குனர் ராஜசேகர் இப்படத்தை இயக்கி இருந்தார்.

சாதாரண காமெடிப்படம்தான் இது. அதில் கொஞ்சம் குடும்ப உறவுகளையும் கொலாப்ஸ் செய்து படம் இயக்கி இருந்தார் ராஜசேகர்.

படத்தில் இடம்பெற்ற டில்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்லை தட்டாதே என்ற பாடல் மிக புகழ்பெற்றது பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. சந்திர போஸ் இசையமைத்து இருந்தார்.

இப்படத்தின் முக்கிய அம்சமே க்ளைமாக்ஸில் வரும் சூப்பர் கார்தான் அதை வைத்துதான் இப்படத்தின் விளம்பரங்கள் பிரதானமாக செய்யப்பட்டிருந்தன.

இப்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் ஆயிரம் மாயாஜாலங்களை செய்து விட முடியும். ஆனால் அன்றைய நிலையில் அது புதுசுதான். கார் இரண்டாக பிரிவது சேர்வது என அசத்தி இருந்தனர் படக்குழுவினர்.

சிறுவர்களுக்கு இக்கார் காட்சிக்காவே இப்படம் மிகவும் பிடித்திருந்தது.

ஏவிஎம் புரொடக்சன்ஸின் திரையுலக வரலாற்றில் முக்கிய அம்சமாக இக்கார் விளங்குகிறது.

From around the web