சன்னி லியோன் பாஸ் செய்ததாக தேர்வு ஆணையம் செய்த குழப்பம்

பீகார் மாநில பொது சுகாதாரப் பொறியியல் துறையில் இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 214 பணியிடங்களுக்கு 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.இவர்களின் கல்வித்தகுதி, அனுபவம் அடிப்படையில் இரண்டாம் கட்டத்தேர்வுக்கு 642 பேர் இறுதி செய்யப்பட்டனர். இதற்கான தகுதிப்பட்டியல் அந்த துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 98.5 சதவீத மதிப்பெண்களுடன் நடிகை சன்னி லியோன் பெயர் முதலிடத்தில் இடம் பெற்றுள்ளது.இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இணை செயலாளர் அசோக்குமார் கூறும்போது, ”சன்னி லியோனின் பெயரில் விண்ணப்பம் வந்துள்ளது.
 

பீகார் மாநில பொது சுகாதாரப் பொறியியல் துறையில் இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 214 பணியிடங்களுக்கு 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களின் கல்வித்தகுதி, அனுபவம் அடிப்படையில் இரண்டாம் கட்டத்தேர்வுக்கு 642 பேர் இறுதி செய்யப்பட்டனர்.

சன்னி லியோன் பாஸ் செய்ததாக தேர்வு ஆணையம் செய்த குழப்பம்

இதற்கான தகுதிப்பட்டியல் அந்த துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 98.5 சதவீத மதிப்பெண்களுடன் நடிகை சன்னி லியோன் பெயர் முதலிடத்தில் இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இணை செயலாளர் அசோக்குமார் கூறும்போது,


”சன்னி லியோனின் பெயரில் விண்ணப்பம் வந்துள்ளது. டிப்ளமோ என்ஜினீயரிங்கில் அவர் 98.5 மதிப்பெண் பெற்றிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த விண்ணப்பம் நிஜமானதா இல்லை சன்னிலியோன் பெயரில் போலியாக யாரும் அனுப்பியிருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய முடியவில்லை. சான்றிதழ் மற்றும் ஆவணங்களை சரிபார்க்கும்போதுதான், இதை உறுதிப்படுத்த முடியும்” என அவர் கூறினார்.

From around the web