மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறாரா சன்னி லியோன்? சீட் கொடுத்த தனியார் கல்லூரி

நடிகை சன்னி லியோனுக்கு கொல்கத்தா கல்லூரி சீட் கொடுத்துள்ளதால் மீண்டும் அவர் கல்லூரியில் சேர்ந்து படிக்க உள்ளாரா? என்ற பரபரப்பு தகவல் இணையதளங்களில் பரவி வருகிறது மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் அசுடோஷ் என்னும் தனியார் கல்லூரி உள்ளது. இங்கு பிஏ ஆங்கிலம் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியானது. இந்த பட்டியலில் சன்னி லியோன் பெயர் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது யாரோ குறும்புக்காரன் மாணவர் ஒருவர் சன்னி லியோனின் பெயரில் விண்ணப்பம்
 

மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறாரா சன்னி லியோன்? சீட் கொடுத்த தனியார் கல்லூரி

நடிகை சன்னி லியோனுக்கு கொல்கத்தா கல்லூரி சீட் கொடுத்துள்ளதால் மீண்டும் அவர் கல்லூரியில் சேர்ந்து படிக்க உள்ளாரா? என்ற பரபரப்பு தகவல் இணையதளங்களில் பரவி வருகிறது

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் அசுடோஷ் என்னும் தனியார் கல்லூரி உள்ளது. இங்கு பிஏ ஆங்கிலம் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியானது. இந்த பட்டியலில் சன்னி லியோன் பெயர் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

யாரோ குறும்புக்காரன் மாணவர் ஒருவர் சன்னி லியோனின் பெயரில் விண்ணப்பம் பதிவு செய்துள்ளார். அந்த விண்ணப்பத்தை சரியாக சோதனை செய்யாமல் அவருக்கு கல்லூரியில் சீட் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து அந்த கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்தபோது ’யாரோ தவறான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளனர். அதை சரி செய்யுமாறு சம்பந்தப்பட்ட உத்தரவிடப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார். இந்த நிலையில் சன்னி லியோன் இந்த செய்தி குறித்து தனது டுவிட்டரில் ’உங்கள் எல்லோரையும் அடுத்த செமஸ்டரில் சந்திக்க காத்திருக்கின்றேன். என்னுடைய வகுப்பில் நீங்களும் இருப்பீர்கள் என நம்புகிறேன்’ என்று நகைச்சுவையுடன் கேட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web