பிரபல இயக்குநரின் படத்தில் 'சன்னி லியோன்'? வெளியான வைரல் ஃபோட்டோ!

சன்னி லியோனுடனான சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் குமரவேலன் வெளியிட்டுள்ளார். 
 
பிரபல இயக்குநரின் படத்தில் 'சன்னி லியோன்'? வெளியான வைரல் ஃபோட்டோ!

நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன்.

கமல்ஹாசன் நடிப்பில் கல்யாணராமன், மீண்டும் கோகிலா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஜிஎன் ரங்கராஜனின் மகனான ஜிஎன்ஆர் குமரவேலன் பாலு மகேந்திரா மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்டோர் இயக்கங்களில் உருவான சில படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.

பின்னர் 2009-ஆம் ஆண்டு பிருத்விராஜ், சக்தி, பிரியாமணி மற்றும் பலர் நடித்து வெளியான  நினைத்தாலே இனிக்கும் படத்தை இயக்கியிருந்தார். இதனை அடுத்து 2016-ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வாகா திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

அண்மையில் அருண் விஜய் நடிப்பில் குமரவேலன் இயக்கியுள்ள சினம் படத்தின் டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சன்னி லியோனுடனான சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் குமரவேலன் வெளியிட்டுள்ளார். எனினும் சன்னி லியோன் குமரவேலன் படத்தில் நடிக்கவுள்ளாரா? உள்ளிட்ட இதர விபரங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

அண்மையில் தான் சன்னி லியோன் மலையாளத்தில் உருவாகியுள்ள ஷூரோ படத்தில் நடித்திருந்தார். தமிழில் ஏற்கனவே வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் வீரம்மா தேவி படத்தில் சன்னி லியோன் நடிப்பதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வரை வெளியாகியிருந்தன. 

From around the web