நம்ம சுனித்தாவா இது? சின்ன வயசுல எப்படி இருக்காங்க பாருங்க!!!

சுனிதா சிறுவயதில் எப்படி இருந்திருப்பார். பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..!
 
நம்ம சுனித்தாவா இது? சின்ன வயசுல எப்படி இருக்காங்க பாருங்க!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. 

போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது.

முக்கியமாக இந்த சீசனை ஷிவாங்கி அஸ்வினுக்காகவே பலரும் பார்க்கின்றனர் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அஸ்வினுக்காக ஷிவாங்கியும் சுனிதாவும் போட்டி போட்டுக் கொள்ளும் சிறு சிறு சண்டைகளும் வயிற்றை பதம் பார்க்கும் அளவிற்கு சிரிப்பை வரவழைக்கிறது. 

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் சுனிதா. தமிழ் தெரியாமல் அவர் பேசும் வார்த்தைகளும், பாடல்களும் மிகவும் ரசிக்கும்படி உள்ளது. அந்த வகையில் சுனிதா தமிழர்களுக்கு புதிதானவர் அல்ல. பல வருடங்களாக விஜய் டிவியில பிரபலமான ஒரு முகம்தான். நடன கலைஞரான அவர் வாங்குடன் சேர்ந்து பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சுனிதா சிறுவயதில் எப்படி இருந்திருப்பார். பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..!

From around the web