சுந்தர் சியின் அடுத்த படம்: இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்

 

பிரபல இயக்குனர் சுந்தர் சியின் திரைப்படங்கள் என்றாலே ஒன்றுக்கும் மேற்பட்ட ஹீரோக்களும் ஹீரோயின்களும் இருப்பார்கள் என்பது தெரிந்ததே. அவருடைய ’அரண்மனை 3’ படத்தின் மூன்று பாகங்களிலும் மூன்று நாயகிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது அவர் தயாரிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் மூன்று நாயகர்கள் நடிக்க உள்ளனர். பிரசன்னா, ஷாம் மற்றும் அசோக் செல்வன் ஆகிய மூவரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு காமெடி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சுந்தர் சியின் உதவியாளர் பரணி என்பவர் இயக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் ஸ்ருதிகா என்ற புதுமுகம் நாயகியாக நடிக்கவுள்ளார்.

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ’மாயாபஜார் 2016’ என்ற படத்தின் ரீமேக் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. சத்யா என்பவர் இசையமைக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது

From around the web