தயவு செய்து நிறுத்துங்க... இப்பதான் வாய்ப்பே வருது! கடுப்பான நடிகை!...

தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் வந்ததிகளே என்றும் திருமணம் செய்து கொள்ளும் திட்டம் தற்போது இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். 
 
தயவு செய்து நிறுத்துங்க... இப்பதான் வாய்ப்பே வருது! கடுப்பான நடிகை!...

திருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும், திருமணம் செய்து கொள்ளும் திட்டம் தற்போது இல்லை என்றும் பிரபல திரைப்பட நடிகை சுனைனா கூறியுள்ளார். திரைப்பட வாய்ப்புகள் தன்னைத் தேடி வந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காதலில் விழுந்தேன் படம் மூலம் அறிமுகமான சுனைனா, நீர் பறவை, வம்சம், என்னை நோக்கி பாயும் தோட்ட உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு லாக்டவுனுக்கு முன்னதாக சுனைனா நடித்த சில்லுக்கருப்பட்டி படமும் நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது. லாக்டவுன்னுக்கு பின்னர் டிரிப் எனும் திரைப்படத்தில் நடித்த சுனைனா,  இப்போது ராஜ ராஜ சோரா என்கிற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழிலும் பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தான் அவர் திருமணம் செய்துகொள்வதாக தொடர்ந்து வெளியாகி வரும் தகவல்களை அவர் மறுத்துள்ளார். அத்துடன்,  கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிறைய வாய்ப்புகள் தன்னை தேடி வருவதாகவும், பல வகையான கதாபாத்திரங்கள் கிடைத்துள்ளதாகவும், அதிலும் சில இயக்குநர்கள், தம்மை மனதில் கொண்டு கதைகளை எழுதியிருப்பது தமக்கு உற்சாகம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் வந்ததிகளே என்றும் திருமணம் செய்து கொள்ளும் திட்டம் தற்போது இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். தனது திருமணம் பற்றி பேசுவதை தவிர்த்துவிட்டு, தனது திரைப்படங்கள் குறித்து பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்ட சுனைனா, திரைவாழ்க்கையில் தான் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

From around the web