ரஜினி, விஜய், சூர்யாவை அடுத்து பிரபல நடிகருடன் கைகோர்க்கும் சன்பிக்சர்ஸ்!

 
ரஜினி, விஜய், சூர்யாவை அடுத்து பிரபல நடிகருடன் கைகோர்க்கும் சன்பிக்சர்ஸ்!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’, தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ சூர்யா நடித்து வரும் ’சூர்யா 40’ ஆகிய திரைப்படங்களையும் அதுமட்டுமின்றி இந்த சுந்தர் சி உள்பட பல பிரபலங்கள் படங்களை தயாரித்து வருகிறது என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த பிரமாண்டமான படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தை சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

vijay sethupathi

மேலும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web