சுமோ டிரெய்லர்- ஸ்போர்ட்ஸ் படங்களை கலாய்க்கிறாரா சிவா

சிவாவை பொறுத்தவரை கலாய்ப்பது அவருக்கு ஒரு பெரிய விசயமில்லை. எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் தனது தமிழ்ப்படம் மற்றும் தமிழ்ப்படம்2வில் கலாய்த்து தள்ளி விட்டு போய்க்கொண்டே இருப்பார். தமிழ்ப்படம்2வுக்காக செய்யப்பட்ட விளம்பரங்கள் கொஞ்சம் அல்ல. அப்போது பூஜை போடப்பட்டு ஷூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருந்த சர்க்காரை கூட விட்டுவைக்கவில்லை.சர்க்கார் போஸ்டரை கூட கலாய்த்து தமிழ்ப்படம் 2 சார்பில் போஸ்டர் வெளியிடப்பட்டது. இப்போது ஹோசிமின் இயக்கத்தில் சுமோ படத்தில் நடித்துள்ளார் சிவா. இப்பட டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் தான் கடற்கரையில் கண்டெடுத்த
 

சிவாவை பொறுத்தவரை கலாய்ப்பது அவருக்கு ஒரு பெரிய விசயமில்லை. எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் தனது தமிழ்ப்படம் மற்றும் தமிழ்ப்படம்2வில் கலாய்த்து தள்ளி விட்டு போய்க்கொண்டே இருப்பார்.

தமிழ்ப்படம்2வுக்காக செய்யப்பட்ட விளம்பரங்கள் கொஞ்சம் அல்ல. அப்போது பூஜை போடப்பட்டு ஷூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருந்த சர்க்காரை கூட விட்டுவைக்கவில்லை.சர்க்கார் போஸ்டரை கூட கலாய்த்து தமிழ்ப்படம் 2 சார்பில் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இப்போது ஹோசிமின் இயக்கத்தில் சுமோ படத்தில் நடித்துள்ளார் சிவா. இப்பட டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் தான் கடற்கரையில் கண்டெடுத்த சுமோ பயில்வானை சுமோ விளையாட்டில் ஈடுபடுத்த அவரை ஊக்கப்படுத்தி விளையாட்டில் ஜெயிக்க வைப்பது போல் காட்சிகள் உள்ளது.

இது சாதாரண காட்சிகள்தான் ஆனால் சிவா குரூப் படம் என்றால் சும்மா இருப்பார்களா, சமீப காலமாக விளையாட்டு படமாக அதிகம் வருகிறது பிகில், சேம்பியன், வெண்ணிலா கபடிக்குழு2,கனா, ஜடா, கென்னடி கிளப் என விளையாட்டு படங்களும் அதில் ஒரே மாதிரியான காட்சிகளும் வருகிறது. இந்த படங்களின் சில காட்சிகள் ஒரே மாதிரியாகவே இருக்கும் இதை அடிப்படையாக வைத்து கலாய்த்து எடுக்கப்பட்டிருக்கலாம் என டிரெய்லரை வைத்தே அறிய முடிகிறது.

விளையாட்டுக்காக சுமோவை ஊக்கப்படுத்தும் காட்சிகள் அனைத்தும் கலாய்ப்பாகவே இருக்கிறது.

From around the web