சம்மருக்கு களமிறங்கும் "எம்ஜிஆர் மகன்!"

"இயக்குனர்"," புரொடியூசர்"," நடிகர்" என மூன்று முகங்களை கொண்டவர் "நடிகர் சசிகுமார்". நடிகர் சசிகுமார் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாக்கிய திரைப்படம் "சுப்ரமணியபுரம்". இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, இவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. மேலும் நடிகர் சசிகுமார் "நாடோடிகள்"," பிரம்மன்"," கிடாரி" போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக நாடோடி என்ற திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக நாடோடி திரைப்படம் நண்பர்கள் மத்தியில் பேசும் படமாக அமைந்தது.தற்போது தனது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "எம்ஜிஆர் மகன்". இத்திரைப்படத்தில் இவருடன் பிரபல நடிகர் "சத்யராஜ்" இணைந்து நடித்துள்ளார். இத்திரைப்படத்தினை பிரபல இயக்குனரான பொன்ராம் இயக்கியுள்ளார். இத்திரைப்படமானது ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி வெளியாகும் என ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
ரமேஷ் ட்விட்டர் பக்கம் நடிகர் சசிகுமார் மற்றும் அவரின் ரசிகர்களுக்கு மிகுந்த ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.மேலும் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள "ராஜவம்சம்" என்ற திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரமேஷ் ட்விட்டர் பக்கம் கூறிய தகவலும் நடிகர் சசிகுமாரின் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.
#MGRMAGAN - will hit the screens on April 23rd.. @SasikumarDir @ponramVVS @Screensceneoffl @mirnaliniravi @thondankani @anthonyinparty @senthilkumarsmc @sidd_rao @skiran_kumar @vivekharshan @onlynikil @SonyMusicSouth @CtcMediaboy pic.twitter.com/UgeSQiZanh
— Ramesh Bala (@rameshlaus) February 19, 2021