சண்டையில கிழியாத சட்டை இல்ல குமாரு - மிரட்டும் சுல்தான்!!!

சண்டையில கிழியாத சட்டை இல்ல குமாரு என்கிற பாடலை வெளியிட்டு பயங்கரமாக மிரட்டியுள்ளது சுல்தான்.
 

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர் பாக்யராஜ் கண்ணன். இவருடைய அடுத்த படம்தான் கார்த்தி நடித்து கொண்டிருக்கும் சுல்தான். இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகியிருக்கிறது.

நடிகர் கார்த்தி, ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியிருக்கும் சுல்தான் படத்திற்கு விவேக்-மெர்வின் கூட்டணி இசையமைத்திருக்கிறது. அனிருத், ஜூனியர் நித்யா மற்றும் கானா குணா இணைந்து பாடியிருக்கும் இந்த சிங்கிள் தற்போது வெளியாகி இருக்கிறது. 

சிவகார்த்திகேயனின் ரெமோ படம் 2016ஆம் ஆண்டு வெளியானதை அடுத்து சுமார் ஐந்து வருடம் கழித்து இயக்குனர் பாக்யராஜ் கண்ணனின் அடுத்த படமான சுல்தான் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டே ரிலீசாக வேண்டிய இந்த படம் கொரோனா காரணமாக தள்ளிப்போனதாக கூறப்படுகின்றது. கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் கலக்கி வரும் நடிகை ரஷ்மிகா மந்தனா பாலிவுட்டிலும் தற்போது தடம் பதித்திருக்கிறார். இந்த நிலையில்தான் நடிகர் கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தில் அவர் தமிழில் நேரடியாக நாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். அண்மையில்தான் சுல்தான் பட டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தான் ஜெய் சுல்தான் என்னும் தர லோக்கலான கானா பாடல், பர்ஸ்ட் சிங்கிளாக இப்படத்தில் வெளியாகி இருக்கிறது. விவேகாவின் பாடல் வரிகளில் விவேக்-மெர்வின் இசையில் உருவாகியிருக்கும் இந்த பாடலை அனிருத் பாடி வேற லெவலில் தனக்கே உரிய பாணியில் பாடியிருக்கிறார். இந்த பாடலில்,‘சண்டையில கிழியாத சட்டை இல்லை குமாரு.. மண்ட ரெண்டா போவாத சண்டை ரொம்ப சுமாரு’ எனத் தொடங்கும் இந்த ஜெய் சுல்தான் பாடலின் முழு வரிகளும் தர லோக்கலாக ஒரே பீட்டில் அதகளம் கிளப்புகிறது.தவிர அனுபல்லவியில் ‘ஏ சுல்தான் வா சுல்தான் என்னும் வரிகள்’ இடம் பெற்றுள்ளன. 


 

From around the web