அட வைரலாக பரவிவரும் நம்ம சுல்தான் போட்டோஸ்....!

வைரலாக பரவிவரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் போட்டோஸ்...,
 
ரமேஷ் பாலாவின் ட்விட்டர் பக்கம் கூறும் கருத்து...,

"கைதி" படத்தில் மாஸ்காட்டி நடித்து இருப்பார் "நடிகர் கார்த்தி". இவர் பிரபல நடிகரான சூர்யாவின் தம்பியாவார். இவர் நடிப்பில் வெளியானது "ஆயிரத்தில் ஒருவன்" என்ற திரைப்படம். தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். மேலும் "பையா"," சிறுத்தை"," பருத்திவீரன்" போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் நடிப்பில் வெளியாகி இருந்த "தீரன் அதிகாரம் ஒன்று" என்ற திரைப்படம் இவருக்கு நல்லதொரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி படம் வேற லெவலாக ஓடியது. சில நாட்களுக்கு முன்பு வெளியாகிய "கடைக்குட்டி சிங்கம்" என்ற திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவரையும் கண்கலங்க வைத்தது.

sulthan

தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "சுல்தான்". இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக"நடிகை ரஷ்மிகா மந்தனா"நடித்துள்ளார்.நடிகை ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியானது "கீதா கோவிந்தம்" என்ற திரைப்படம். இத்திரைப்படம் நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கு மிகுந்த ஒரு வெற்றி படமாக அமைந்தது.

தற்போது இவர் நடிகர் கார்த்தியுடன் "சுல்தான்" என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார் இத்திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகர்"யோகி பாபு" நடித்துள்ளார். யோகி பாபு நடிப்பில் வெளியாகிய "ரெமோ" ,"காக்கா முட்டை "போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்ப்பை மக்களிடம் பெற்றுக் கொடுத்தது.தற்போது சுல்தான் படத்தின் சில புகைப்படங்களை ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில்  ஷேர் செய்துள்ளார் .அவர்  ஷேர்செய்த அந்த புகைப்படங்கள் மக்களிடையே வைரலாக பரவிக் கொண்டுள்ளது.

From around the web