’மாஸ்டர்’ டீசரில் திடீர் திருப்பம்: ரசிகர்கள் ஏமாற்றம்!

 

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்பது போன்ற ஒரு அறிவிப்பு ’மாஸ்டர்’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று மதியம் வெளியானது 

மேலும் லோகேஷ் கனகராஜ், மாளவிகா மோகனன் ஆகியோர்களின் டுவிட்டர் பக்கங்களிலும் இது குறித்த வீடியோ வெளியானது என்பதால் இன்று மாலை 6 மணியை நோக்கி விஜய்யின் ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர்


ஆனால் திடீர் திருப்பமாக இன்று மாலை 6 மணிக்கு ’மாஸ்டர்’ திரைப்படத்தின் டீசர் தீபாவளியன்று அதாவது நவம்பர் 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் இன்னும் இரண்டு நாள் காத்திருக்க வேண்டுமே என்ற ஏக்கத்தில் ஏமாற்றத்தில் உள்ளனர்

இருப்பினும் தீபாவளி விருந்தாக ’மாஸ்டர்’ திரைப்படத்தின் டீசர் வெளியாக இருப்பதை அறிந்த விஜய் ரசிகர்கள் இன்னொரு பக்கம் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளியன்று ’மாஸ்டர்’ திரைப்படம் வெளியாக வில்லை என்றாலும் டீசராவது வெளியாகின்றதே என்ற திருப்தியில் விஜய் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web