’மாஸ்டர்’ ரிலீசில் திடீர் சிக்கல்: ஜாக்பாட் அடித்த ஈஸ்வரன்

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. ’மாஸ்டர்’ படத்திற்காக தமிழகத்தில் மட்டும் சுமார் ஆயிரம் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது இருப்பினும் பொங்கல் தினத்தில் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படமும் வெளியாகும் என்பதால் திரையரங்குகள் பகிர்ந்து கொடுக்கப்படும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளிவந்தன
இந்த நிலையில் தற்போது திடீரென ’மாஸ்டர்’ திரைப்படம் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உலகம் முழுவதும் ஒரே நாளில் ’மாஸ்டர்’ திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்பதுதான் தயாரிப்பாளர்களின் முடிவு. ஆனால் தற்போது பிரிட்டனில் புதிய வகை வைரஸ் பரவி வருவதை அடுத்து உலகின் பல நாடுகளில் திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன
இந்த நேரத்தில் ’மாஸ்டர்’ படத்தை ரிலீஸ் செய்வது சரியானதாக இருக்காது என்று அப்படக்குழுவினர் கருதுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் ’மாஸ்டர்’ திரைப்படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
’மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்கினால் அதே நாளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்த ஈஸ்வரன் படத்திற்கு மிகப்பெரிய ஜாக்பாட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 300 முதல் 400 திரையரங்குகள் அந்த திரைப்படத்திற்காக ஒதுக்கப்பட்டு இருக்கும் நிலையில் ’மாஸ்டர்’ ரிலீஸ் ஆகவில்லை என்றால் சுமார் 700 திரையரங்குகளுக்கும் மேலாக ஈஸ்வரன் படத்திற்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவகிறது