சிம்பு படத்திற்கு திடீரென வந்த சிக்கல்: கோலிவுட் அதிர்ச்சி

 

சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தின் டீஸர் தீபாவளி அன்று வெளியாகி அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது தெரிந்தது 

இந்த டீசரின் காட்சிகளில் சிம்பு ஸ்லிம்மாக இருந்தது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது

easwaran

இந்த நிலையில் திடீரென விலங்குகள் நல வாரியத்தால் சிம்புவின் ஈஸ்வரன் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த படத்தில் விலங்குகள் நல வாரியத்தின் அனுமதி இன்றி படப்பிடிப்பில் பாம்புகள் பயன்படுத்தப்பட்டதாகவும் இதனையடுத்து இதுகுறித்து ஈஸ்வரன் படக்குழுவினர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது

இந்த நோட்டீஸ்க்கு 7 நாட்களில் பதிலளிக்க வேண்டுமென விலங்குகள் நலவாரியம் கெடு விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்வதற்கும் தடை விதித்து விலங்குகள் நல வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web