தீவிர ரசிகையின் திடீர் மரணம்: ஓவியா அதிர்ச்சி

 

தனது தீவிர ரசிகைகளில் ஒருவர் திடீரென மரணம் அடைந்து உள்ளதை அடுத்து ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் தனது அதிர்ச்சியை தெரிவித்து உள்ளார் 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியாவுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. அந்தவகையில் ஓவியாவின் தீவிர ரசிகையாக இருந்த சான்வி என்பவர் சமீபத்தில் எதிர்பாராதவிதமாக மரணமடைந்துவிட்டார்

இது குறித்து அவருடைய தோழி ஒருவர் ஓவியாவுக்கு தகவல் தெரிவித்து ஓவியாவை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்பதுதான் சான்வியின் ஆசையாக இருந்ததாகவும் ஆனால் அவருடைய ஆசை கடைசிவரை நிறைவேற்றவில்லை என்றும் கூறியுள்ளார் 

இந்த தகவலை அறிந்த ஓவியா பெரும் வருத்தம் அடைந்து அவருக்கு தனது இரங்கலை தெரிவித்ததோடு, அவருடைய ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார் அதுமட்டுமின்றி சான்வியின் பெற்றோரை தான் சந்திக்க விரும்புவதாகவும் இதற்காக ஏற்பாடு செய்யுமாறும் அவர் தெரிவித்துள்ளார்


 

From around the web