வெளியேறினார் சுசித்ரா: நூலிழையில் தப்பித்த அனிதா!

 
வெளியேறினார் சுசித்ரா: நூலிழையில் தப்பித்த அனிதா!

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இன்று சுசித்ரா விலகியதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன

அனிதா, சோம், ஆரி, சம்யுக்தா, ரியோ, பாலாஜி மற்றும் சுசி ஆகியோர்கர்கள் நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில் நேற்றி சோம், ஆரி, பாலாஜி, ரியோ ஆகிய 4 பேர் காப்பாற்றப்பட்டனர் இந்த நிலையில் இன்று சம்யுக்தா, சுசித்ரா மற்றும் அனிதா ஆகியோர்களில் கடைசி நேரத்தில் சம்யுக்தா, அனிதா காப்பாற்றப்பட்ட நிலையில் சுசித்ரா தான் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியே வருவார் என்று உறுதியானது

இன்று வெளியாகிய மூன்றாவது புரமோ வீடியோவில் வெளியேறும் போட்டியாளரை வழியனுப்பி விட்டு திரும்பி சோகமாக நடக்கும் போட்டியாளர்களின் காட்சி உள்ளது. அந்த வீடியோவில் சுசித்ரா தவிர மீதி உள்ள 14 பேர்கள் இருக்கிறார்கள் என்பதால் சுசித்ரா இந்த வாரம் வெளியேறி உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது 

suchi evict

மேலும் சுசித்ரா கடந்த சில நாட்களாக மனநிலை சரியில்லாதவர் நடந்துகொண்டதாகவும் தன்னந்தனியாக பேசிக்கொண்டும் திடீரென்று கோபப்பட்டு கொண்டிருந்ததாகவும் அவருக்கும் குறைவான வாக்குகள் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது 

இருப்பினும் நூலிழையில்தான் அனிதா தப்பித்து உள்ளார் என்பதும் இந்த வாரம் அவர் சுதாரிப்பாக விளையாட வில்லை என்றால் அடுத்த வாரம் அவர்கள் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது


 

From around the web