டெர்ரராக உள்ளே நுழையும் சுசித்ரா: அர்ச்சனா குருப்புக்கு ஆப்பு!

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை எதிர்ப்பவர்களை அன்பால் பாசத்தால் கட்டிப் போட்டு தன்னுடன் வைத்துக் கொள்ளும் வித்தையை கடந்த சில நாட்களாக அர்ச்சனை செய்து வருகிறார். அதனால் அவரது குரூப்புக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது 

இந்த நிலையில் நேற்று அர்ச்சனாவுக்கு கமல்ஹாசன் நேரடியாகவும் மறைமுகமாகவும் அர்ச்சனை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமன்றி அர்ச்சனாவுக்கு முன்பே ஆரிக்கு அவர் ஆதரவு கொடுத்ததும் அர்ச்சனா குரூப்புக்கு கடுப்பாகியது

இந்த நிலையில் அர்ச்சனாவை மேலும் கடுப்பேற்றும் வகையில் இன்று பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார். இது குறித்த காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் வெளிவந்துள்ளது அர்ச்சனாவின் பாச நாடகத்திற்கு ஆப்பு வைக்கும் வகையில் சுசித்ரா காயை நகர்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

ஏற்கனவே அர்ச்சனாவுக்கு எதிராக ஆரி தலைமையில் ஒரு குருப் உருவாக்கி விட்டதை அடுத்து அந்த குரூப்பில் சுசித்ராவின் இணைந்தால் அர்ச்சனாவின் ஆட்டம் குளோஸ் தான் என்பது தெரிகிறது. ஏற்கனவே நேற்று அர்ச்சனா தனது பலவீனத்தை உணர்ந்து நான் விரைவில் வீட்டை விட்டு வெளியே போக போகிறேன் என்று புலம்பிய நிலையில் இன்று சுசித்ரா உள்ளே நுழைந்து உள்ளதால் அர்ச்சனாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 


 

From around the web