அர்ச்சனாவுக்கு இவ்வளவு பெரிய வரவேற்பா? என்ன ஒரு அழகான வீடியோ

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா அன்பு என்ற ஆயுதத்தை பயன்படுத்தி சர்ச்சைக்குரிய வகையில் விளையாடி வந்தாலும் அவரது வெளியேற்றம் பார்வையாளர்களை கொஞ்சம் வருத்தப்பட வைத்தது என்றுதான் கூறவேண்டும்

அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது அவரை விமர்சனம் செய்து வந்தவர்கள் கூட அவர் வெளியேறிய நாளில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இவ்வளவு தைரியமாக ஒரு பெண் தனக்காக விளையாடி இருந்தால் கண்டிப்பாக டைட்டில் பட்டத்தை நெருங்கி இருப்பார் என்றும், அவர் அன்பு என்ற ஆயுதத்தை பயன்படுத்தி மற்றவர்களுக்காக விளையாடியதே அவர் செய்த ஒரே தவறு என்று கூறி வருகின்றனர் 

archana

இந்த நிலையில் அர்ச்சனா வீட்டிற்குள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி தனது வீட்டிற்குள் செல்லும் போது பதிவு செய்யப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வெளியிட்டுள்ளார். அதில் என்ன ஒரு அன்பு? எத்தனை அன்பு மழை? என்பது வீடியோவை பார்க்கும் போது தெரிகிறது 

அர்ச்சனா ஏன் அன்பு என்ற ஆயுதத்தை பிக் பாஸ் வீட்டில் பயன்படுத்தினார் என்பதை அவருடைய குடும்பத்தினர் அவரை வரவேற்ற விதத்தை பார்க்கும் போதே தெரிகிறது. அர்ச்சனாவின் மகள் அம்மா மற்றும் கணவர் ஆகியோர் அவர் மீது எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை அந்த வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. குறிப்பாக அவர் வளர்த்துவரும் நாய் அவரை விட்டு அகலவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை நீங்களும் பார்த்து ரசியுங்கள்

From around the web