அம்மா விஷயத்தில் அடுத்தடுத்து கூறிய பொய்: வசமாக சிக்கிய பாலாஜி 

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தி விளையாடி வருகிறார். குறிப்பாக முதல் வாரத்தில் தனது அம்மாவும் அப்பாவும் குடிகாரர்கள் என்றும் தனக்கு பள்ளிக்கு செல்லும் போது சாப்பாடு கூட கொடுக்க மாட்டார்கள் என்றும் மற்றவர்கள் கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டே வளர்ந்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் 

ஆனால் அடுத்த சில நாட்களிலேயே பாலாஜி தனது அம்மாவை குறித்து கூறியபோது எனது அம்மா ஒரு இன்னோசென்ட் என்றும் மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற விட்டு வீட்டிற்கு வந்தபோது எனக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர் என்றும் கூறியுள்ளார் 

அம்மா குறித்து அடுத்தடுத்த சில நாட்களில் பாலாஜி மாறி மாறி பேசியுள்ளது குறித்து நெட்டிசன்கள் ஆதாரத்துடன் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். அம்மாவை வைத்து அவர் பிக் பாஸ் வீட்டில் ஆட்டம் ஆடி கொண்டிருப்பதாகவும் முதல் வாரம் பேசிய வாயா இந்த வாரம் இப்படி பேசுகிறது? என்றும் 2 வீடியோக்களையும் மாறி மாறி பதிவு செய்து அதற்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் 

பிக்பாஸ் போட்டியில் வெற்றி பெறுவதற்காக அம்மாவை பற்றி இப்படி மாற்றி மாற்றி பேச வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது


 

From around the web