முட்டாள் எப்போதுமே முட்டாள் தான்: கார் விபத்தை விமர்சித்த நெட்டிசனுக்கு குஷ்பு பதிலடி!

 

நடிகை குஷ்பு இன்று சென்னையில் இருந்து கடலூருக்கு வேல் யாத்திரையில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தபோது திடீரென செங்கல்பட்டு அருகே அவர் சென்ற கார் விபத்தில் சிக்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

இந்த நிலையில் இந்த கார் விபத்து குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குஷ்புவை குறிவைத்து வேண்டுமென்றே கண்டெய்னரை அவருடைய காரில் மோதியதாகவும் நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் 

இந்த நிலையில் குஷ்பு விபத்துக்குள்ளான காரின் உள்ளே இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்த நெட்டிசன் ஒருவர் ’ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் என்றும் முன்னாடி சீட்டுல உட்கார்ந்து ஒரு போட்டோ, பின்னாடி சீட்ல உட்கார்ந்து ஒரு போட்டோ என்றும், அருமையான கிரியேட்டிவிட்டி என்றும் கிண்டலடித்து இருந்தார் 


இந்த கிண்டலுக்கு பதிலடி கொடுத்துள்ள குஷ்பு ‘ஒரு முட்டாள் எப்போதுமே முட்டாளாக இருப்பான் என்பது உறுதியாகிறது. கல்வி கல்வி தான் முட்டாளை புத்திசாலியாக மாற்றுகிறது. காரின் முன்னால் உட்கார்ந்து இருப்பவர் உடையும் பின்னால் உட்கார்ந்து இருப்பவர் உடையும் வெவ்வேறாக இருக்கிறது உங்களுக்கு தெரியவில்லையா? அல்லது உங்கள் கண் பார்வை தரமற்றதாக போய்விட்டதா? முதலில் பயன்படுத்தாத உங்கள் மூளையை பயன்படுத்துங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார் 

குஷ்புவின் இந்த பதிவை தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

From around the web