யூஜிசியின் சூப்பர் அறிவிப்பால் மாணவர்கள் குஷி!

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கல்லூரியில் சேர்ந்து விட்டு அதன் பின்னர் கல்லூரிக்கு வர முடியாத மாணவர்களின் கல்வி கட்டணத்தை உடனடியாக திருப்பி தர யுஜிசி உத்தரவிட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. ஆனால் அதே நேரத்தில் கல்லூரியில் சேர்ந்து விட்டு கொரோனா வைரஸ் ஊரடங்கு மற்றும் சில காரணமாக கல்லூரிக்கு வராத மாணவர்களுக்கு கல்லூரி கட்டணத்தை திருப்பித்தர வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 

students

இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்ட யுஜிசி இதுகுறித்து அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி அனைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கும் யுஜிசி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது 

அந்த சுற்றறிக்கையில் ஊரடங்கு காரணமாக கல்லூரி மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் சேர்ந்து நவம்பர் 30க்கு முன்பாக விலகியிருந்தாலோ அல்லது வேறு கல்லூரிகளில் இடம் பெயர்ந்தாலோ அவர்களுக்கு முழு கல்விக் கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு காரணமாக கல்லூரியில் இருந்து விலகிய மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

From around the web