ஹன்சிகாவின் பாட்டை கேட்டு கடுப்பான நடிகர்: வைரல் வீடியோ!

 

நடிகை ஹன்சிகா தற்போது மஹா உள்பட இரண்டு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் பிரபல இயக்குனர் ஒருவரின் அடுத்த படத்தில் அவர் நாயகியாக நடிக்க உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 

இந்த நிலையில் தற்போது மாலத்தீவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஹன்சிகா அங்கிருந்தபடியே மாலத்தீவின் அழகையும் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது பதிவு செய்து வருகிறார் 

hansika

இந்த நிலையில் சற்று முன் அவர் பதிவு செய்த வீடியோ ஒன்றில் பாடல் ஒன்றுக்கு தாளம் போட்டபடியே பாடிக் கொண்டிருக்கும் காட்சியை பதிவு செய்திருக்கிறார் 

அவருடைய பாடலைக் கேட்டு எரிச்சலடைந்த அவருக்கு முன் உட்கார்ந்து இருந்த நபர் ஒருவர் கடுப்பாகி உணர்ச்சி வசப்படுகிறார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 

மேலும் இந்த பதிவில் நடிகை ஹன்சிகா கேப்ஷனாக குறிப்பிடும் போது எனக்கு முன்னால் உட்கார்ந்து இருக்கும் நபரின் மிகச்சிறந்த நடிப்பை பாருங்கள் என்று அவர் என்ன ஒரு எக்ஸ்பிரஷன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் 

இந்த வீடியோவை சுமார் 2 லட்சம் பேர் லைக் செய்து உள்ளனர் என்பதும் அவற்றில் ஒருவர் டிடி என்ற திவ்யதர்ஷினி என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web