படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே மிகப்பெரிய தொகைக்கு வியாபாரமாகிய ‘வலிமை’

தல அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’வலிமை’. போனிகபூரின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தை வியாபாரம் செய்ய ஆரம்பித்து விட்டார் போனி கபூர். முதல் கட்டமாக இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு திரைப்படமும் விற்பனையாகாத மிகப்பெரிய தொகைக்கு வெளிநாட்டு உரிமை விற்கப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது
அதிரடி ஆக்ஷன் மற்றும் சேஸிங் காட்சிகள் உள்பட ஹாலிவுட் படத்துக்கு நிகராக ‘வலிமை’ இருக்கும் என்பதால் இந்த படத்தின் வியாபாரம் புதிய சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது