தெருகூத்து நாடகம் நடத்திய போட்டியாளர்கள்

தெருகூத்தினை கற்றுக்கொண்ட போட்டியாளர்கள் அதனை நடித்தும் காட்டுகின்றனர். இதில் ராஜா, ராணி கோமாளி ஆகியோருடன் போட்டியாளர்கள் நடனமாடுகின்றனர். இதில் சாண்டி, ஷெரின் ராணி போன்றும், தர்ஷன், வனிதா ராஜா போன்றும் சேரன், முகின் கோமாளி போன்றும் லோஸ்லியா, கவின் மந்திரி போன்றும் வேடம் அணிந்து தெருகூத்து நடத்தினர். அவர்கள் அனைவருக்கும் உடை அலங்காரங்கள் அனைத்தும் கச்சிதமாக பொருந்தியது. இந்த தெருகூத்து மூலம் மக்களுக்கு கருத்து தெரிவிக்கும் வகையில் வனிதா அணியினர் சாலை விபத்துகள் மூலம் ஏற்படும் உயிர்
 

தெருகூத்தினை கற்றுக்கொண்ட போட்டியாளர்கள் அதனை நடித்தும் காட்டுகின்றனர். இதில் ராஜா, ராணி கோமாளி ஆகியோருடன் போட்டியாளர்கள் நடனமாடுகின்றனர். இதில் சாண்டி, ஷெரின் ராணி போன்றும், தர்ஷன், வனிதா ராஜா போன்றும் சேரன், முகின் கோமாளி போன்றும் லோஸ்லியா, கவின் மந்திரி போன்றும் வேடம் அணிந்து தெருகூத்து நடத்தினர். அவர்கள் அனைவருக்கும் உடை அலங்காரங்கள் அனைத்தும் கச்சிதமாக பொருந்தியது.

 இந்த தெருகூத்து மூலம் மக்களுக்கு கருத்து தெரிவிக்கும் வகையில் வனிதா அணியினர் சாலை விபத்துகள் மூலம் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்கும் வரையிலான விழிப்புணர்வு தெருகூத்து நாடகத்தை அரங்கேற்றினார்கள்.

தெருகூத்து நாடகம் நடத்திய போட்டியாளர்கள்

     இதில் எமதர்ம ராஜாவாக வனிதாவும், கோமாளியாக முகினும், ராணியாக சாண்டியும், சித்ரகுப்தனாக லோஸ்லியாவும் வேடம் அணிந்து நாடகத்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து சேரன் அணியினர் நீரின்றி அமையாது உலகு என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக இந்த நாடும் நாட்டு மக்களும் நீரினை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை விளக்கும் வகையில் தெருகூத்தினை அமைத்தனர்.

     இதன் மூலம் காடுகளை வளர்ப்போம், இயற்கையை நேசிப்போம், குளம் மற்றும் ஏரிகளை உருவாக்குவோம் என்று கூறி நாடகத்தினை முடித்தனர். இதில் சேரன் அணியே வெற்றி பெற்றது என்று நாட்டுபுற கலைஞர் காளீஸ்வரனும் தெருகூத்து கலைஞர் ராமகிருஷ்ணனும் கூறினார்கள். இதில் வெற்றி பெற்ற அணிக்கு வாழ்த்துக்கள் கூறினார் பிக்பாஸ்.

From around the web