சகோதரர் திருமணத்தில் அசத்தல் நடனம்: நடிகையின் வைரல் வீடியோ!

 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஒருவர் தனது சகோதரர் திருமணத்தில் அசத்தல் நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

மகாராஷ்டிரா மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்ததால் பெரும் சர்ச்சைக்கு உள்ளான நடிகை கங்கனா ரணாவத். இவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

kangana

மகாராஷ்டிரா அரசு கடுமையான விமர்சனம் செய்ததால் அவரது அலுவலகம் மும்பை மாநகராட்சியால் இடிக்கப்பட்டது என்பதும், அதன் பின்னர் நீதிமன்ற தலையீடு காரணமாக நிறுத்தப்பட்டது என்பதும், தனது அலுவலகம் இடிக்கப்பட்டதற்காக ரூபாய் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் நடிகை கங்கனாவின் சகோதரர் அக்‌ஷத் என்பவரின் திருமண நிகழ்ச்சி நேற்று மும்பையில் நடந்தது. இதில் பாரம்பரிய உடை அணிந்த நடிகை கங்கனா இசைக்கு ஏற்றவாறு நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையதளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. கங்கனாவின் சகோதர திருமணத்தில் மும்பையில் உள்ள பெரும்பாலான முக்கிய பிரமுகர்களும் திரையுலக நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web