விவேக்-தேவயானி ஜோடிக்காக இணைந்த சிம்பு, விஷால், கார்த்தி

விவேக், தேவயானி முதன்முறையாக இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘எழுமின்’. இந்த படத்தின் டிரைலரை நடிகர்கள் சிம்பு, விஷால் மற்றும் கார்த்தி இணைந்து வெளியிடவுள்ளனர். வையம் மீடியாஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘எழுமின்’ படத்தை வி.பி.விஜி இயக்கியுள்ளார். இந்த படத்தில் விவேக், தேவயானி, பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் உள்பட பலர் நடித்துள்ளனர். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு கணேஷ் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். தற்காப்பு கலைகளை
 

விவேக்-தேவயானி ஜோடிக்காக இணைந்த சிம்பு, விஷால், கார்த்தி விவேக், தேவயானி முதன்முறையாக இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘எழுமின்’. இந்த படத்தின் டிரைலரை நடிகர்கள் சிம்பு, விஷால் மற்றும் கார்த்தி இணைந்து வெளியிடவுள்ளனர்.

வையம் மீடியாஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘எழுமின்’ படத்தை வி.பி.விஜி இயக்கியுள்ளார். இந்த படத்தில் விவேக், தேவயானி, பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் உள்பட பலர் நடித்துள்ளனர்.

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு கணேஷ் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை பற்றிய கதைதான் இந்த படத்தில் வித்தியாசமாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இடம் பெறும் எழுச்சி மிகு பாடல் ஒன்றை யோகி பி பாடி இருக்கிறார்.

விவேக்-தேவயானி ஜோடிக்காக இணைந்த சிம்பு, விஷால், கார்த்தி

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வரும் திங்கட்கிழமை வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த டிரைலரை நடிகர் சிம்பு, விஷால் மற்றும் கார்த்தி ஆகிய மூவரும் இணைந்து வெளியிடுகின்றனர்.

From around the web