இந்த படத்தில் கதை தான் பிரமாண்டம்: ரஜினி படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார் என்று நேற்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்தை மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் தயாரித்ததால் இந்த படமும் பிரமாண்டமான படமாக இருக்கும் என்று கருதப்பட்டது ஆனால் இந்த படம் குறித்து கருத்து கூறிய கார்த்திக் சுப்புராஜ், ‘ரஜினியின் இந்த படத்தில் எந்திரன் போன்ற பிரமாண்டம் இருக்காது. இந்த படத்தில் கதையும்
 

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார் என்று நேற்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்தை மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் தயாரித்ததால் இந்த படமும் பிரமாண்டமான படமாக இருக்கும் என்று கருதப்பட்டது

ஆனால் இந்த படம் குறித்து கருத்து கூறிய கார்த்திக் சுப்புராஜ், ‘ரஜினியின் இந்த படத்தில் எந்திரன் போன்ற பிரமாண்டம் இருக்காது. இந்த படத்தில் கதையும் திரைக்கதையும் தான் பிரமாண்டம். ஆனால் அதே சமயம் ரஜினி ரசிகர்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இருக்கும்’ என்று கூறியுள்ளார். இளமையும் அனுபவமும் இணையும் இந்த படம் நிச்சயம் தமிழில் ஒரு மாறுபட்ட படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

From around the web