ஷூட்டிங்கின்போது சினிமா புகைப்பட கலைஞர் விபத்தில் பலி- பிரபல நடிகர் காயம்

தேனி மாவட்டம் கோம்பை பகுதியை சேர்ந்தவர் இயக்குனர் ராஜ்கபூர். கார்த்திக், சத்யராஜ், முரளி, அஜீத் என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கிய ராஜ்கபூர் சின்னப்பசங்க நாங்க, சின்ன ஜமீன்,அவள் வருவாளா, என பல படங்களை இயக்கியுள்ளார். சமீப காலமாக டிவி சீரியல்களை இயக்கி வருகிறார். இவர் தனது சொந்த மாவட்டமான தேனியில் இருந்து கொண்டு ஊர் மரியாதை என்ற சீரியலை இயக்கி வருகிறார். இதில் பணியாற்றிய சினிமா புகைப்படக்காரர் சிவாவும், நடிகர் மீசை தவசி என்பவரும்
 

தேனி மாவட்டம் கோம்பை பகுதியை சேர்ந்தவர் இயக்குனர் ராஜ்கபூர். கார்த்திக், சத்யராஜ், முரளி, அஜீத் என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கிய ராஜ்கபூர் சின்னப்பசங்க நாங்க, சின்ன ஜமீன்,அவள் வருவாளா, என பல படங்களை இயக்கியுள்ளார்.

ஷூட்டிங்கின்போது சினிமா புகைப்பட கலைஞர் விபத்தில் பலி- பிரபல நடிகர் காயம்

சமீப காலமாக டிவி சீரியல்களை இயக்கி வருகிறார். இவர் தனது சொந்த மாவட்டமான தேனியில் இருந்து கொண்டு ஊர் மரியாதை என்ற சீரியலை இயக்கி வருகிறார்.

இதில் பணியாற்றிய சினிமா புகைப்படக்காரர் சிவாவும், நடிகர் மீசை தவசி என்பவரும் கோம்பை பகுதியில் இந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்டு விட்டு காரில் உத்தமபாளையம் பகுதியில் கார் நிலை தடுமாறி கவிழ்ந்தது.

நடிகர் மீசை தவசி காயமடைய புகைப்படக்காரர் சிவா மரணமடைந்தார். இது ஷூட்டிங்க் நடத்தி வந்த குழுவினருக்கு கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் மீசை தவசி பல படங்களில் காமெடி மற்றும் முன்னணி வேடங்களில் நடித்துள்ளார்.

ஸ்டில்ஸ் சிவா மறைவுக்கு மனோபாலா உள்ளிட்ட சினிமா கலைஞர்கள் பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர்

From around the web