தொடங்கியது தனுஷ்-செல்வராகவன் படப்பிடிப்பு: தயாரிப்பாளர் வாழ்த்து

 

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானதை அடுத்து இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இதனை செல்வராகவன் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார் என்பதும் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதை அடுத்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இதுகுறித்து கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது டுவிட்டரில் கூறியதாவது: என்றும் மக்களின் உள்ளத்தில் நிலைத்து நிற்கும் காவியங்களை படைத்த பெருமைக்குரிய இயக்குனர் செல்வராகவன் அவர்களுடன் முதல் முறையாக இணைவதில் அளவில்லா ஆனந்தம்’ என்று கூறியுள்ளார்.

selvaragavan

தனுஷ் மற்றும் செல்வராகவன் மீண்டும் இணையும் இந்த திரைப்படம் ’புதுப்பேட்டை’ படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்பட்டாலும் இன்னும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனுஷ் மற்றும் செல்வராகவன் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த படம் ’புதுப்பேட்டை 2’ படமாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன 

அதுமட்டுமின்றி தனுஷ் மற்றும் செல்வராகவன் மீண்டும் இணைய இருப்பதாகவும் அந்த திரைப்படம் தான் ’ஆயிரத்தில் ஒருவன் 2’ என்றும் சமீபத்தில் அறிவிப்பு வெளியானதும். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் இந்த ஆண்டு தொடங்கி 2024 ஆண்டு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web