எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’: நாளை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!

 

பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகிய இருவரும் நடித்து வரும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் அட்டகாசமான ராம்சரண் தேஜாவின் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்தது என்பதும் துணிச்சல் மரியாதை மற்றும் ஒருமைப்பாடு கொண்ட மனிதன் என்று கேப்ஷனாக அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

rrr

இந்த நிலையில் ராம்சரண் போஸ்டரை அடுத்து நாளை இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானின் மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை 12 மணிக்கு இந்த மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளது. இதனை அடுத்து பாலிவுட் திரை உலகினர் இந்த மோஷன் போஸ்டரை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்

ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, ஆலியா பட், அஜய்தேவ்கான், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்து வருகிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் அக்டோபர் 13-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web