நக்சலைட் மிரட்டல்.. போலிஸ் குவிப்பு... ஸ்ருதி படத்திற்கு வந்த சோதனை

அவ்விடங்களில் நக்சலைட் தீவிரவாதிகளின் நடமாட்டம் உள்ளதால் படக்குழுவுக்கு மிரட்டல்கள் வந்துள்ளதாம்.
 

நீண்ட காலத்திற்கு பின் தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதியின் படத்தின் மூலம் இணைந்த நடிகை ஸ்ருதி ஹாசன். ஹீரோவின் செயல்பாடுகளை காரணம் காட்டி படத்திலிருந்து விலகினார்.

தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வரும் அவருக்கு அண்மையில் ரவிதேஜாவுடன் நடித்த Krack படம் வெளியானது. இதனையடுத்து நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து சலார் படத்தில் நடித்து வந்தார்.

5 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. முதலில் கோலார் தங்க வயலில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தெலுங்கானாவில் நிலக்கரி சுரங்கம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் படக்காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. ஆனால் அவ்விடங்களில் நக்சலைட் தீவிரவாதிகளின் நடமாட்டம் உள்ளதால் படக்குழுவுக்கு மிரட்டல்கள் வந்துள்ளதாம்.

இதனால் பிரபாஸ் மற்றும் படக்குழுவினர் போலிஸ் பாதுகாப்பை நாடினர். இதனால் படப்பிடிப்பு தளத்தில் 40 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனராம்.

From around the web