வீடியோ ஆதாரம்: நடிகை ஸ்ரீரெட்டியை கைது செய்ய போலீஸ் தீவிரம்?

நடிகை ஸ்ரீரெட்டி மீது துணை நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்ய சைபர் க்ரைம் போலீசார் திட்டமிட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துணை நடிகை கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குனர் ராகேஷ் ஆகியோர் சமீபத்தில் தெலுங்கானா போலீசாரிடம் புகார் ஒன்றினை அளித்தனர். இந்த புகாரில் நடிகை ஸ்ரீரெட்டி தங்கள் இருவர் குறித்து ஆபாசமாகவும் அருவருப்பாகவும் பேசியதாக கூறியதோடு இதுகுறித்த வீடியோ ஆதாரங்களையும் சமர்ப்பித்தனர். இதனையடுத்து இந்த வீடியோ ஆதாரங்களின்
 
வீடியோ ஆதாரம்: நடிகை ஸ்ரீரெட்டியை கைது செய்ய போலீஸ் தீவிரம்?

நடிகை ஸ்ரீரெட்டி மீது துணை நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்ய சைபர் க்ரைம் போலீசார் திட்டமிட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துணை நடிகை கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குனர் ராகேஷ் ஆகியோர் சமீபத்தில் தெலுங்கானா போலீசாரிடம் புகார் ஒன்றினை அளித்தனர். இந்த புகாரில் நடிகை ஸ்ரீரெட்டி தங்கள் இருவர் குறித்து ஆபாசமாகவும் அருவருப்பாகவும் பேசியதாக கூறியதோடு இதுகுறித்த வீடியோ ஆதாரங்களையும் சமர்ப்பித்தனர்.

இதனையடுத்து இந்த வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் ஸ்ரீரெட்டி மீது வழக்குப்பதிவு செய்துள்ள சைபர் க்ரைம் போலீஸ், விரைவில் ஸ்ரீரெட்டியை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web